Original Reading:http://www.awakin.org/read/view.php?tid=729
விருந்தோம்பலின் தர்மம்
- தாமஸ் பெர்ரி
நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளும்போது நம் வளம் கூடுகிறது என்ற விழிப்புணர்வு நமக்கு மன அமைதியைத் தரக் கூடும்.
இந்த பிரபஞ்சமும், பூமியும், வர்ணிக்க முடியாத வேற்றுமைகளின் சங்கமத்தை, தங்கள் ஒற்றுமையால் அரவணைத்து இருப்பதை நாம் இவற்றின் அமைப்பிலும் செயல்பாட்டிலும் நாம் உணரலாம்.
19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தோரோ எனும் இயற்கை ஆர்வலரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. தோரோ மிக மிக எளிய வாழ்க்கையை விரும்பி வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு அழகான புல்வெளியும், மரங்களும் கலந்த ஒரு நிலத்தின் மீது ஈர்க்கப் பட்டு அதை வாங்க நினைத்தார். முன் பணத்த்தையும் செலுத்தினார். இந்த நிலத்தின் அழகையும் அற்புதத்தையும் தினம் அதனை காணும்போதே ரசிக்க முடிகிற போது எதற்காக நான் அதை என் பெயரில் வாங்க வேண்டும் என்ற உணர்தல் அவருக்கு வந்தது. நிலம் ஒருவர் பெயரில் இருந்தாலும், அதை ரசிப்பதன் மூலம், பலரும் அந்த நிலத்துக்கு சொந்தக்காரர்கள் ஆக முடியும்.
பழங்கால சீனாவில் வாழ்ந்த மெனிகஸ் என்ற எழுத்தாளர் சீனப் பேரரசரை தன் மாளிகைத் தோட்டத்தில் சாமானிய மக்களையும் அனுமதிக்க வைத்தார். இவ்வாறு செய்வதால் அரசரின் சந்தோஷம் கூடும் என்பதைப் புரிய வைத்ததார்.
இந்தியாவில், பல நூறாண்டுகளாக, அனைத்து உயிர்களும் கரை தாண்டும் வரை தங்கள் தேவைகளைப் பொருட்படுத்த மாட்டோம் என்ற உறுதி மொழியை எடுக்கும் போதிசத்வர்களின் சரித்திரம் உண்டு.
இன்று நாம் ஒருவருடன் ஒருவர் மிக எளிதில் தொடர்பு கொள்ளும் நிலையை அடைந்து இருக்கிறோம். இதனால், நாம் தொலை தூரத்தில் வாழ்பவர்களைக் கூட சந்திக்க முடியும். சேர்ந்து, அமர்ந்து, கதைகள் பல பரிமாறி, உணவுடன் அருந்த முடியும். காலம் காலமாக, அதிதிகளை திறந்த மனதுடன் வரவேற்கும் விருந்தோம்பலின் தர்மம், இன்றைய் உலகிலும் நம்மை அழைக்கிறது.
No comments:
Post a Comment