Original reading:
http://www.awakin.org/read/view.php?tid=343தயாரிக்காத மௌனம்
- ஆத்யஷாந்தி
மௌனம், அமைதி, விழிப்புணர்வு போன்றவற்றை நாம் உருவாக்க முடியாது. அவை நாம் தயாரிக்க கூடிய நிலைகள் இல்லை. பெயரும், உருவமும் அற்ற மௌனம் என்னும் சாட்சியில்தான் எல்லா நிலைகளும் எழுவதும், பின்பு விழுவதும் நடக்கிறது. நாம் இந்த சாட்சியாக, அமைதியில் இருக்கும்பொழுது மற்ற எல்லாம் அதனதன் இயற்கையில் இயங்குகின்றன. மனதின் கட்டாயப் பிடியில் இருந்து நம் விழிப்புணர்வு விடுபடுகிறது.
எண்ணங்களின் ஓயாத அசைவுகளால் தொட முடியாத ஒன்றை நம் அனுபவத்தின் மூலம் கண்டுபிடிப்பது நம் ஆன்மீக பயிற்சியின் நோக்கமாகும். இதற்காக நம் எண்ணங்களை அடக்கத் தேவை இல்லை, மூளையை மட்டும் பயன்படுத்தி எல்லவற்றையும் புரிந்து கொள்ள வேண்டியதும் இல்லை. நம்முள் எப்பொழுதும் இருக்கும், நாம் அறியாத, அசையாத மூலத்தை அறியும் முயற்சியில் நாம் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் நம் எண்ணங்கள் உண்மையை பிரதிபலிக்கத் தொடங்கும். இல்லாவிடில் கருத்துக்களால் மட்டும் உருவாக்கப்பட்ட தோற்றங்களை மட்டுமே நம்மால் காண முடியும்.
நான் பேசுவது எண்ணம், கருத்து, நம்பிக்கை - இவற்றின் வழியே மட்டும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும், நிர்பந்தம் இல்லாத மனதின் ஒரு நிலையப் பற்றி; நம்முடைய பாதுகாப்புக்காக மனதையோ, உணர்வுகளையோ, உணர்ச்சிகளையோ மேற்கோள் காட்டாமல், எல்லா பிரிவுகளையும் நாம் மறந்து, மனம் விடுதலை அடையும் நிலையைப் பற்றி.
No comments:
Post a Comment