Original reading:
http://www.awakin.org/read/view.php?tid=957முடிவில்லா வெளீயில் பயணம்
- ரெய்னெர் மரியா ரில்க
சோகம் வந்தடையும் தருணங்கள் எல்லாம் பதற்றம் மிக்க, உணர்வுகளை இழந்த தருணங்களாக நமக்கு தோன்றுகின்றன, அறிமுகமில்லாத ஒரு புதிய நிலையுடன் நாம் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை; நமக்கு தெரிந்த எல்லாம் ஒரு கணம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு விட்ட ஒரு நிலை. இருந்தாலும், ஒரு மாற்றத்தின் நடுவே நம்மால் நின்று கொண்டே இருக்க முடியாது. அதனால்தான் சோகம் என்பது கடந்து போகிறது. புதிய நிலை நமக்குள் ஐக்கியம்மகி நம் ரத்தத்தோடு கலந்து போகிறது.
இதனால் ஒரு விருந்தாளியின் வருகையால் ஒரு வீடு எப்படி மாறுகிறதோ அப்படி நாம் மாறிப் போகிறோம். வந்தவர் யார் என்று யோசிக்கிறோம். அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், நம்முடைய எதிர் காலம்தான், அது நிகழ்வதற்கு வெகு முன்பே, நமக்குள் புகுந்து, உருமாறி, அமர்ந்து இருக்க்கிறது என்று சொல்லலாம். இதனால் சோகமாக இருக்கும்போது மிக கவனத்துடன் இருப்பது நல்லது.
எந்த அளவுக்கு சோக நிலையில் நாம் அமைதியுடன், பொறுமையுடன், திறந்த மனதுடன் இருக்கிறோமோ அந்த அளவுக்கு, ஆழமான, தெய்வீகமான ஒரு நிலை நமக்குள் நுழைய முடியும். எந்த அளவுக்கு அதை நாம் வரவேற்று நமதாக்கிக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு அது நமது விதியாக மாறுகிறது. பின்னர் அது நிகழ்காலமாகி நடக்கும்போது, அதை நம் உள்ளூயிரால் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு நாம் மன வளர்ச்சி அடையும் போது நமக்கு நிகழ்வது எல்லாம் நமக்குள் வெகு காலமாக இருந்தவையே; வெளியில் இருந்து வருவன இல்லை என்பது தெளிவாகிறது. தீதும் நன்றும் பிறர் தந்து வருவது இல்லை. விதி என்பது நம்முள் இருந்தே வெளிப்படுகிறது என்பது புரிகிறது.
பெரும்பாலான மக்கள், எதிர்காலம் தன்னுள் நுழையும்போது அதை கவனித்து ஐக்கியம் செய்வதில்லை, அதனால் அது நிகழ்காலமாக மாறி நடக்கும்போது, அதை அடையாளம் கண்டு கொள்ளவதும் இல்லை. தாம் கவனித்த அந்தத் தருணம் வரை, அது எங்கு இருந்தது என்று அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறார்கள்.
பூமியை சுற்றிதான் சூரியன் வருகிறது என்று பண்டைய மக்கள் தவறாக நினைத்தது போல நாமும், காலத்தின் வருகைப் பற்றி தவறாக நினைக்கிறோம். காலம் நின்று கொண்டு இருக்கிறது. நாம்தான் முடிவில்லா வெளியில் நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment